லவ் டுடே
லவ் டுடே படத்தில் எனக்கு இரண்டு விஷ்யங்கள் மட்டுமே மிக முக்கியமானதாகப் படுகிறது. ஒன்று, காதலில் நம்பிக்கை அவசியம் என்பது. மற்றொன்று, காதலின் அருமையை உணர்ந்து அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது. காதல் எல்லா காலத்திலும், எல்லா சூழலிலும் தீவிரமான உணர்ச்சிதான். அதன் தன்மை எப்போதும் மாறுவதில்லை. காதல் வரும் வயதில் அதை நிதானமாக அணுகத்தான் பலருக்கு பக்குவம் போதாமல் இருக்கிறது. அதிலும், பெண்களைவிட ஆண்களுக்கு இதில் உணர்ச்சி சிக்கல் சற்று அதிகமாகவே இருக்கிறது. காதலில் மிகச் சிறிய புறக்கணிப்பிற்குக்கூட ஆண் பெரும் துயரடைகிறான். பெரியதொரு மனவிலகலுக்கு ஆளாகிவிடுகிறான். காதல் அவ்வளவு பெரிய sensitive சமாச்சாரமாக இருக்கிறது. நிகிதாவின் எக்ஸ் லவ்வர் அவள்வீட்டு வாசலில் காரை நிறுத்திக்கொண்டு, "depression ஆ இருக்கு, வா எங்கயாவது வெளிய போலாம்" என்று கேட்கிறான். தனக்கு பிரச்சனை என்றபோதெல்லாம் அவன் உடனிருந்திருக்கிறான் என்பதாலும், அவனுக்கு தற்போது தன் இருப்பு ஒரு ஆசுவாசத்தை தரக்கூடும் என்ற நினைப்பாலும் அவனோடு பாண்டிச்சேரி வரைச் சென்று Sunrise பார்த்துவிட்டுத் திரும்புகிறாள். மன அழுக்கின்றி தன்...