Posts

Showing posts from January, 2024

காந்தாரா - பார்வை

Image
கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி மக்களுள் ஒரு பிரிவினருடைய நில அரசியலையும், அதோடு தொடர்புடைய அவர்களின் தெய்வ வழிபாட்டு நம்பிக்கை பற்றியும் பேசுகிறது படம். அம்மக்கள் துளுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களுடைய குலதெய்வம் "பஞ்சுருளி". பன்றிக் குருளை என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு வடிவம்தான் இந்த பஞ்சுருளி என்கிறார்கள்.  வனப்பகுதியில் வாழும் அவர்கள் பன்றியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள்.  நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாக  அப்போதிருந்த சிற்றரசனால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை  தற்போதுள்ள (1970,1990களில்) அந்த சிற்றரச வாரிசுகளான பண்ணையார்களிடமிருந்து அம்மக்கள் பஞ்சுருளி தெய்வத்தின் துணையோடு எப்படி காப்பாற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதைக்கான களம்.  முதல் 20 நிமிடம் வரை மிக நன்றாக நகர்ந்து, பின் மெதுமெதுவாய் முற்பாதிவரை தொய்வடைய தொடங்குகிறது  திரைக்கதை. திராபையான காட்சி கோர்ப்புகளாக Commercial entertainer நோக்கில் Interval வரை கொண்டுபோயிருக்கிறார்கள். பிற்பாதியில் மீண்டும் மெல்ல சூடுபிடித்து இறுக்கமான காட்சிகளோடு க்ளைமாக்ஸ் முடிகிறது. முன்பகுதி திரைக்க...

"ஆப்பிளுக்கு முன்" நாவல் குறித்தான விமர்சனம்:

Image
காந்தி - மனிதத்தின்மீது பேரன்பு கொண்ட பழமைவாதி: 'ஆப்பிளுக்கு முன்' நாவலை படித்து முடித்தபோது, காந்தி எனும் மகத்தான ஆளுமையின் முழுமைகளை இவ்வளவு தாமதமாய் அறிய நேர்ந்தது குறித்து வருத்தமே மேலிட்டது. நேதாஜி, பகத்சிங், அம்பேத்கர், பெரியார் ஆகியோர்மீது அதீத பற்றும் பிரேமையும் கொண்ட பலருக்கு காந்தி என்றால் வேப்பங்காய்தான். அப்படிப்பட்டவர்கள் இந்நாவலைப் படிக்கநேரும் போது, "வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி" என்ற வரிக்கேற்ப அவர்மீது சில நல்ல அபிப்ராயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முற்றிலும் மகாத்மாவாக மாறிவிடுவாரா என்றால், அவரவர் புரிதலைப் பொறுத்தது. அவரை மகாத்மாவாக மாற்ற முனைப்பு காட்டும் நூல் இதுவல்ல என்பதே என்புரிதல். காந்தியின் அரசியல், அவரது கொள்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றை முதன்மைப் பேசுபொருளாக இந்நாவல் கொண்டிருக்கவில்லை. "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருந்தார். ஆனால், இரண்டில் எது கூத்து, எது காரியம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்" என்று ஆசிரியர் நாவலின் ஓரிடத்தில் சொல்லிச் செல்வார். அந்த ரகசியத்தில் மூக்கை நுழைக்காமல், காந்தியின் பிரம...

லதீபா - சிறுகதை

                                        1                                         அன்றும் திங்கட்கிழமைதான். வாரத்தின் மொத்த பணி நாட்களின் பாரத்திற்கும் தலைமையேற்று, பொறுப்புத் தாங்கி நின்று தவிக்கவிடுவதைத் தவிர, வேறென்ன அந்தஸ்து அதற்கு இருந்துவிடப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். தாம்பரத்திலிருந்து லோக்கல் ரயில் ஏறி, தினம் வேலைக்குச் சென்றுவரும் நானும்கூட, என் எதிர்ப்புற இருக்கையில் சற்றுமுன்னர் வந்தமர்ந்த அந்தப் பள்ளி மாணவனையும், அவன் மடியில் பிளாஸ்டிக் கவர் முழுக்க நிரம்பி வழியும் ஒற்றைச் செம்பருத்திப் பூக்களையும் பார்க்காத வரை அதே வெறுமை உணர்வில்தான் இருந்தேன்.   பார்த்த மாத்திரத்திலேயே அவன் பயாலஜி குரூப் மாணவன் என்பதைப் புரிந்துகொண்டேன். பிராக்டிகலுக்காகச் செம்பருத்திப் பூக்களைச் சேகரித்து எடுத்துச் செல்கிறான். ஓடும் ரயிலைத் துரத்திக் கொண்டு ஜன்னல் வழியாக வந்து விழும் இள...