Posts

சந்தியா காலம்

Image
                                                  1                                   சரியாகச் சொன்னால் பூந்தமல்லியிலிருந்து  ஸ்ரீபெரும்புதூருக்கு அந்த வளைவு வழியாகத்தான் உள்நுழைய முடியும். அதுவொரு முச்சந்தி வளைவு  . நைட் ஷிப்ட் செல்ல கம்பெனி வேனுக்காகக் காத்துக்கொண்டிருந்த பவித்ராவை தனியார் லோடு வண்டி ஒன்று மோதித் தள்ளியதும், மனிதநேயம் சிறிதும் இல்லாதவனாய் அந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதும், ரத்த வெள்ளத்தில் அவள் கிடந்து தவித்ததும் அந்த முச்சந்தி வளைவில்தான். பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவளை, கழுத்தில் மாட்டியிருந்த ஐடி கார்டு அவள் யாரென்று அடையாளம் காட்டியதில் உரியவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. செகண்ட் ஷிப்ட்பில் இருந்த கீர்த்தனாவுக்கு விஷயம் தெரிந்ததும் மருத்துவமனைக்குள் இருந்தாள். ஐசியூ அறை முகப்பில் போடப்பட்டிருந்த சேரொன்றில...

காந்தாரா - பார்வை

Image
கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி மக்களுள் ஒரு பிரிவினருடைய நில அரசியலையும், அதோடு தொடர்புடைய அவர்களின் தெய்வ வழிபாட்டு நம்பிக்கை பற்றியும் பேசுகிறது படம். அம்மக்கள் துளுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களுடைய குலதெய்வம் "பஞ்சுருளி". பன்றிக் குருளை என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு வடிவம்தான் இந்த பஞ்சுருளி என்கிறார்கள்.  வனப்பகுதியில் வாழும் அவர்கள் பன்றியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள்.  நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாக  அப்போதிருந்த சிற்றரசனால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை  தற்போதுள்ள (1970,1990களில்) அந்த சிற்றரச வாரிசுகளான பண்ணையார்களிடமிருந்து அம்மக்கள் பஞ்சுருளி தெய்வத்தின் துணையோடு எப்படி காப்பாற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதைக்கான களம்.  முதல் 20 நிமிடம் வரை மிக நன்றாக நகர்ந்து, பின் மெதுமெதுவாய் முற்பாதிவரை தொய்வடைய தொடங்குகிறது  திரைக்கதை. திராபையான காட்சி கோர்ப்புகளாக Commercial entertainer நோக்கில் Interval வரை கொண்டுபோயிருக்கிறார்கள். பிற்பாதியில் மீண்டும் மெல்ல சூடுபிடித்து இறுக்கமான காட்சிகளோடு க்ளைமாக்ஸ் முடிகிறது. முன்பகுதி திரைக்க...

"ஆப்பிளுக்கு முன்" நாவல் குறித்தான விமர்சனம்:

Image
காந்தி - மனிதத்தின்மீது பேரன்பு கொண்ட பழமைவாதி: 'ஆப்பிளுக்கு முன்' நாவலை படித்து முடித்தபோது, காந்தி எனும் மகத்தான ஆளுமையின் முழுமைகளை இவ்வளவு தாமதமாய் அறிய நேர்ந்தது குறித்து வருத்தமே மேலிட்டது. நேதாஜி, பகத்சிங், அம்பேத்கர், பெரியார் ஆகியோர்மீது அதீத பற்றும் பிரேமையும் கொண்ட பலருக்கு காந்தி என்றால் வேப்பங்காய்தான். அப்படிப்பட்டவர்கள் இந்நாவலைப் படிக்கநேரும் போது, "வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி" என்ற வரிக்கேற்ப அவர்மீது சில நல்ல அபிப்ராயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முற்றிலும் மகாத்மாவாக மாறிவிடுவாரா என்றால், அவரவர் புரிதலைப் பொறுத்தது. அவரை மகாத்மாவாக மாற்ற முனைப்பு காட்டும் நூல் இதுவல்ல என்பதே என்புரிதல். காந்தியின் அரசியல், அவரது கொள்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றை முதன்மைப் பேசுபொருளாக இந்நாவல் கொண்டிருக்கவில்லை. "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருந்தார். ஆனால், இரண்டில் எது கூத்து, எது காரியம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்" என்று ஆசிரியர் நாவலின் ஓரிடத்தில் சொல்லிச் செல்வார். அந்த ரகசியத்தில் மூக்கை நுழைக்காமல், காந்தியின் பிரம...